​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரைச் சித்திரைத் திருவிழாவில் "அணில்கள்" வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.. செல்லூர் ராஜு

Published : Apr 08, 2022 6:17 PM

மதுரைச் சித்திரைத் திருவிழாவில் "அணில்கள்" வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.. செல்லூர் ராஜு

Apr 08, 2022 6:17 PM

மதுரைச் சித்திரைத் திருவிழாவில் "அணில்கள்" வராமல் பார்த்துக்கொள்ள வேண்டுமெனச் சட்டப்பேரவையில் செல்லூர் ராஜு பேசியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய செல்லூர் ராஜு, மின்வெட்டு வராமல் பார்த்துக்கொள்ளும்படியாக கூறும் வகையில், அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என மறைமுகமாகப் பேசினார். அப்போது, அதிமுக உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

உடனடியாக, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எழுந்து அதற்குப் பதில் சொல்ல முயன்றார். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டாம் எனத் தடுத்து விட்டதால் அமைச்சர் அமர்ந்துவிட்டார்.